ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு கீர்த்தி சுரேஷ் மிஸ் செய்த இரண்டு மெகா ஹிட் திரைப்படங்கள் பற்றி இங்கே காணலாம்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தற்பொழுது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் தமிழில் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கில் தான் நடித்து வருகிறார்.
அந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா ஆகிய திரைப்படங்கள் இவர் கைவசம் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் சைரன் திரைப்படமும் இவர் நடித்த திரைப்படம் தான் இன்று இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் அந்தோணி பாக்கியராஜ் என்ற புதுமுகம் இயக்குனர் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீசாக நடித்துள்ளார்.
தமிழ், ஹிந்தி என மிகவும் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இரண்டு பிளாக் பஸ்டர் திரைப்படத்தை தவற விட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ ,சூரி, கீர்த்தி சுரேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது ஆனாலும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆனால் இந்த திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு தான் இரண்டு திரைப்படத்தை தவற விட்டுள்ளார் அதில் ஒன்று மணிரத்தினம் இயக்கத்தில் மாஸ்டர் பீஸ் திரைப்படமாக வெளியாகிய பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் முதலில் நடிக்க இருந்தார் ஆனால் அண்ணாத்த திரைப்படத்தில் கமிட்டாகி இருந்ததால் கால்ஷீட் அவரால் கொடுக்க முடியவில்லை அதனால் அந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார் பிறகு தான் அந்த வாய்ப்பு திரிஷாவை சென்றது.
அதேபோல் அண்ணாத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக இன்னொரு படத்தையும் நிராகரித்துள்ளார் ஷியாம் சிங்காராய் திரைப்படத்தில் முதன் முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிப்பதற்கு அணுகியுள்ளார்கள் அதன் பிறகு அவர் கால்ஷீட் இல்லை என்று கூறிய பிறகுதான் நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார் இப்படி இந்த இரண்டு திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் மறுத்ததால் வேறொரு நடிகைகள் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.