நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கினார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். தமிழில் இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கால் தடம் பதித்தார்.
அதன் பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான் அந்த வகையில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்க்கார், பென்குயின் போன்ற படங்கள் அடங்கும். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் கையில் தமிழில் மாமன்னன் திரைப்படம் உள்ளது தெலுங்கில் இரண்டு படம் கைவசம் வைத்து இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு புதிய படத்தில் கமிட்டாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் கைகோர்த்து நடிக்க உள்ளார்.
அந்த படம் முழுக்க முழுக்க ஜெயிலிலேயே படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனை வலை பேச்சு நண்பர்கள் youtube சேனலில் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.