இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மிகப்பெரிய பிரபலத்தினை பெற்று தந்தது.
இந்த படத்திற்குப் பிறகுதான் இவருக்கு கோலிவுட்டில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அப்படி குறுகிய காலத்திலேயே தளபதி விஜய் உடன் இணைந்த நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார். இவ்வாறு சினிமாவில் பிரபலம் அடைந்திருக்கும் இவர் கமர்சியல் ஹீரோயினாக மட்டுமல்லாமல் சோலாவாக நடித்தும் கலக்கி வந்தார்.
ஆனால் இவருடைய திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றினை பெறவில்லை எனவே அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர்களில் ஒருவராக மாறினார். இப்படிப்பட்ட நிலையில் மகாநதி திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது எனவே தனக்கு கிடைத்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பதில் கொடுத்தார்.
ஆனால் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு படங்கள் அமையவில்லை எனவே ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் பல சில திரைப்படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் மிகவும் குறைவான படங்களில் மட்டுமே நடித்த வருகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் இவருடைய உடல் எடையை குறைத்தது தான் இதன் காரணமாக தான் தன்னுடைய மொத்த மார்க்கத்தையும் இழந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிகர் நானியுடன் இணைந்து தசரா திரைப்படத்தில் நடித்திருந்தார் இது மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது இதனை அடுத்து ரகு தாத்தா, போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்று இருக்கும் கீர்த்தி சுரேஷ் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனார் எனவே அவர்களிடம் உரையாடினார் அப்பொழுது முழுக்க முழுக்க தெலுங்கில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷை நிபுணர் ஒருவர் தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு நான் திருப்பதியில் இருக்கின்றேன் என்று மிகவும் நக்கலாக சொல்லிவிட்டு மீண்டும் தெலுங்கில் பேச ஆரம்பித்துள்ளார்.
எனவே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது எனவே ரசிகர்கள் திருப்பதியில் இருந்தால் தமிழில் பேசக்கூடாதா என கேள்வி எழுப்பிவுள்ளனர். மேலும் மாமன்னன் படத்தின் ப்ரமோஷனுக்கு வந்து தான் ஆக வேண்டும் அப்பொழுது தமிழில் பேசினால் அவருக்கு இருக்கு என கூறி வருகின்றனர்.