தசரா பட குழுவிற்காக ஒரு கிலோ தங்கத்தை பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்.! இந்த மனசு தான்யா கடவுள்..

keerthi-suresh
keerthi-suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா படத்தில் முடித்து இருக்கும் நிலையில் அந்தப் படத்தில் பணியாற்றிய 130க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களுக்கு சக நடிகர்களும் சேர்ந்து தங்க காசு பரிசாக வழங்கியுள்ள நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தசரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க நடிகர் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகின்ற மார்ச் 30ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ்சாக இருக்கிறது.

எனவே தசரா படத்தின் ரிலீஸ்சை முன்னிட்டு பட குழுவினர்கள் பிரமோஷன் பணிகளில் தீவிரம் காமித்து வருகிறார்கள். மேலும் நடிகர்கள் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த படத்தை புரோமொட் செய்து வரும் நிலையில் தசரா பட குழுவுக்காக கீர்த்தி சுரேஷ் ஒரு கிலோ மதிப்புள்ள தங்க காசுகளை பரிசாக வழங்கியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது தசரா படத்தின் கடைசி படப்பிடிப்பின் பொழுது பணியாற்றிய சக நடிகர்கள் டெக்னீசியன்கள், லைட் மேன்கள் மற்றும் டிரைவர்கள் உள்ளிட்ட மொத்தம் 130 பேருக்கு தாலா 10 கிராம் எடையுள்ள தங்க காசை பரிசாக வழங்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் வாங்கி கொடுத்த தங்க காசுகளின் மதிப்பு மட்டுமே ரூபாய் 70 முதல் 75 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி உதவி இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் இந்த மனசு தான்யா கடவுள் எனவும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தசரா படத்திற்காக ரூபாய் 3 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாதித்தொகையை பட குழுவினர்களுக்காக செலவிட்டு தங்க காசுகளை வழங்கியுள்ளது பாராட்டிற்குரியது.