சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை ஆகா ஓஹோ என்று இருந்து விட்ட திடீரென பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே அவர்கள் சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவார்கள் அப்படி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆவது வழக்கம் அந்த வகையில் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை இந்த யுக்தியை கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழில் 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக முதன் முதலாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர் கீர்த்தி சுரேஷ் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்பு விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்தார்.
அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் அடைந்தார். இவர் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனாலும் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் இவரை ராசி இல்லாத நடிகை என்று பலரும் கூறுவார்கள். இந்த நிலையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தங்கையாக நடிக்க ஆரம்பித்தார் அதனால் இவரின் மார்க்கெட் அடிமட்டத்திற்கு இறங்கிவிட்டது.
இந்த நிலையில் தற்போது இவர் தசரா, போலோ சங்கர், மாமன்னன், சைரன் ரகு தாதா, ரீவால்வர் ரிதா, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இணையதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நெருங்கிய தோழிகளுடன் மும்பை சென்றுள்ளார்.
அங்கு அவர்களுடன் புகைப்படமும் எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் தோழிகளுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவார்கள் அதேபோல் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தோழிகளுடன் ஊர் சுற்றுவதால் பட வாய்ப்பு எதுவும் இல்லையா என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்.