18 வயதிலேயே விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் இளம் நடிகை.! இவரு ஆசைப்படுவதில்லை தப்பே இல்லை எனக் கூறும் ரசிகர்கள்.!

vijay

தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடைசியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக பாதிப்பு இல்லை என பலரும் கூறி இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்த சரத்குமார், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ் ராஜ், பிரபு ,ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்து வருகிறார் மேலும் இந்த திரைப்படம் வருகின்ற 2023 பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க வாரிசு திரைப்படம் குடும்ப பாங்கான கதை என பலரும் கூறி வருகிறார்கள் அதனால்தான் இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளார்கள். வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டடத்தில்  விஜய் பார்முலா உடையில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது போஸ்டர் வெளியானது அந்த போஸ்டரில் குழந்தைகளுடன் விஜய் இருப்பார் அப்படி இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டரும் வெளியாகி உள்ளது இந்த போஸ்டரில் விஜய் ஒரு பைக்கில் அமர்ந்துள்ளார் அந்த பைக் அவெஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பைக் என ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.

பொதுவாக விஜய்யுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் ஆர்வம் காட்டுவார்கள் அப்படி அனைவரும் விஜய்யுடன் நடித்து விடமுடியாது இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 18 வயதில் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் ஜோடியாக இணைந்து நடிப்பதற்கு ஆசை என வெளிப்படையாக  கூறியுள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி  புல்லட் என்ற பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த இளசுகளையும் களையும் சாய்த்து விட்டார்.

இவர் சூர்யாவுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் தி வாரியர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

keerthi shetty
keerthi shetty