தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து நடித்து அசத்தி வருகிறார் போதாத குறைக்கு சோலோ படங்களிலும் பின்னி பெடல் எடுப்பதால் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
உலகில் இவர் ஹீரோயின் என்ற ரோலில் மட்டும் நடிக்காமல் டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் மற்றும் அக்கா, தங்கை என நடித்து அசத்தி வருகிறார் .அந்த வகையில் சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டு இருக்கிறார். தற்போது இவரைப் போலவே அவரது தந்தையும் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார் இவர்கள் தான் இப்படி என்றால் இவரது தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி ஆகியவர்களுடன் கைகோர்த்து நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் கீர்த்தி சுரேஷ்யின் அக்காவும் தற்பொழுது சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா கீர்த்தி சுரேஷின் அப்பா கலா மந்திர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் தான் தற்போது கீர்த்தி சுரேஷின் அக்கா ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.
இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் அக்கா சினிமா உலகில் என்ட்ரி ஆகிறார். என்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷின் குடும்பமே சினிமாவில் வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.