தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து இருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் தான் இயக்கியிருந்தார் கலவையான விமர்சனத்தை இத்திரைப்படம் பெற்றிருந்தாலும் வசூலில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் வாஷி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பூஜை வருகின்ற 17 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இத்திரைப்படத்தை சொந்த தயாரிப்பு நிறுவனமான ரேவதி காலமந்தீர் கம்பெனி மூலமாக கீர்த்தி சுரேஷின் அக்கா அவர்கள் தயாரிக்க உள்ளார்.
கீர்த்தி சுரேஷ் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை தன்னுடைய சொந்த தயாரிப்பில் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் விஷ்ணு இயக்க உள்ளார் மேலும் கதாநாயகனாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தாயார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்பொழுது நான் நாற்பது வருடங்களுக்கு முன்பாக ரஜினியுடன் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தேன் அப்பொழுது ரஜினி எப்படி இருந்தாரோ அதைவிட இன்னும் அழகாக தான் இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் கீர்த்திசுரேஷ் ரஜினிக்கு தங்கச்சியாக நடித்ததை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள் ஆனால் ரஜினி கீர்த்தி சுரேஷ் இருவரும் திரைப்படத்தில் இப்படி நடித்தது என்ன தான் பிரச்சனை ஒருவர் நிஜ வாழ்க்கையில் வயது குறைந்தவரை திருமணம் செய்து கொண்டால் அதை ஒரு குறையாக கூறலாம் இது சினிமாதானே என மேகனா கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இன்னும் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் இதில் கீர்த்தி சுரேஷ் அவருடைய தங்கையாக நடித்ததிலும் தப்பு ஏதும் கிடையாது. ஆகையால் அடுத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கூட கீர்த்தி நடிப்பால் என கீர்த்தி தாயார் கூறிவிட்டார்.