தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே தனது சிறந்த நடிப்புத் திறமையினால் எளிதில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அந்தவகையில் விஜய், விஷால் என இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இவர் தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகை ஆவார். அந்தவகையில் தெலுங்கில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்து நடித்து வரும் மரைக்காயர் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படங்களின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது எனவே விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபகாலங்களாக வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குண்டாக கும்முனு அழகாக இருந்தார். ஆனால் தனது உடல் எடையை மிகவும் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியதால் ரசிகர்கள் ஒட்டடை குச்சி என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.