நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்று விட்டார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும் கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தன்னுடைய அழகால் திறமையாலும் நடிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த கீர்திசுரேஷ் தமிழில் விஜய் சிவகார்த்திகேயன் விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ஒரு காலகட்டத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு நடிக்க தெரியாது என பலரும் கலாய்த்து வந்தார்கள் அந்த வகையில் தெலுங்கில் மகாநதி திரைப்படத்தில் நடித்து தனது நடிப்புக்காக தேசிய விருதையும் பெற்றார், அதன் பிறகு கீர்த்தி சுரேஷின் புகழ் பாலிவுட்டில் பரவியது.
அதனால் பாலிவுட்டில் நடிப்பதற்கு முதலில் பட வாய்ப்பு கிடைத்தது அதனால் அந்த திரைப்படம் நழுவி போனது இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடித்துவருகிறார் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் மேக்கப் இல்லாமல் ஐ ப்ரோ கூட பண்ணாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
மேலும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார், மேலும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினி தங்கையாக நடிக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள், ரஜினியின் மனைவி நயன்தாராவும் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பு மற்றும் மீனா நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.