தென்னிந்திய சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் திரை உலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் விக்ரம் சூர்யா தனுஷ் நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அணைத்து மொழி சினிமா உலகிலும் பிரபலமடையத் தொடங்கினார். மேலும் பட வாய்ப்பையும் வெகு விரைவிலேயே கைப்பற்றினார்.
அதன் காரணமாக கொழுக் மொழுக்கென்று இருந்த உடல் அமைப்பை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார். அதனையே தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதளபக்கம் புகைப்படங்களை வெளியிட்டார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பார்ப்பதற்கு நடிகை போல தெரியவில்லை என கூறி கமெண்ட் அடித்தனர்.
மேலும் ஒரு சில படங்களில் இவர் ஆல் மாறியதால் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனால் ஒரு பக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது நடிப்பு திறமையை பெரிதும் நம்பி இருந்ததால் இவருக்கு தற்போது சினிமா உலகில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வழியாக இவரது படம் பென்குவின் வெளியிடப்பட்டது திரைப்படம் வெளிவந்து தற்போது நல்லதொரு வரவேற்பை பெற்று வருகின்றன.
இவர் உடல் எடையை குறைத்து இருந்தாலும் இவரது நடிப்பு தற்போது சிறப்பாக இருப்பதால் தான் பட வாய்ப்பு வருகிறது என ஒருபக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் இவர் நடித்த நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது பெற்று கொடுத்து. அதன் காரணமாகவே இவர்கள் தற்பொழுது சினிமா உலகில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இருப்பினும் இருக்கின்ற உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவர் யோகா உடற்பயிற்சி என செய்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் செய்த உடற்பயிற்சியின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காண்பது போல பரவி வருகிறது. அத்தகைய புகைப்படத்தில் இவர் துளிகூட மேக்கப் இல்லாமல் வியர்வை சொட்டசொட்ட இருக்கிறார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில வைரலாகி வருகிறது.