நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருகிறார். ஒருகட்டத்தில் தமிழில் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழை தவிர மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக மகேஷ்பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பட்டா படத்தில் நடித்து அசத்தியிருந்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த இரு படங்களுமே விஜய்க்கு பெரிய அளவு வெற்றியை பெற்றுத் தரவில்லை அதற்கு முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷின் நடிப்பு மொக்கையாக இருந்தது என்று கூறப்பட்டன. இருந்தாலும் தொடர்ந்து விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றலாம் என கீர்த்தி சுரேஷ் கணக்கு போட்டார்.
ஆனால் அது தற்போது நடக்காமல் போய்விட்டது ஏனெனில் விஜய் தற்போது நடித்து வரும் தனது 66வது படத்திலும் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் அடுத்து அவரது 67ஆவது படத்திலும் சமந்தாவிற்கு வாய்ப்பு இருக்கு என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு விஜயின் பிறந்தநாளுக்கு வயலின் வாசித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோவை வெளியிட்டு அசத்தி இருந்தார். ஆனால் இந்தாண்டு அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை என்ற காண்டில் ஒரே ஒரு போஸ்ட் மட்டும் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.