சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் இல்லை – இவர் தான்.! பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

rajini-murugan
rajini-murugan

சினிமா உலகில் டாப் நட்சத்திரங்கள் தொடங்கி இளம் நடிகர் நடிகைகள் பலரும் ஒரு சில காரணங்களால் முக்கிய படத்தை தவற விட்டு பின் புலம்புவது வழக்கம் அந்த வகையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ரஜினிமுருகன்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து கீர்த்தி சுரேஷ் ராஜ்கிரண் சூரி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாகவும்,  செண்டிமெண்ட்  அதேசமயம் காதல் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது.

ரஜினி முருகன் படம் திரையரங்கில் வெளியாகி அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து விட்டதால் இந்த படம் நன்றாகவே ஓடியது. மேலும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற நன்றாகவே உதவியது அதிலும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா போன்ற பல்வேறு டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் ஆனால் உண்மையில் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக முதன் முதலில் நடிக்க வைக்க படக்குழு ஆசைப்பட்டது என்னவோ நடிகை தமன்னாவை தானாம்.

அப்பொழுது தமன்னா கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போன பிறகே நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து தனது கேரியரில் ஒரு நல்ல படத்தை தக்கவைத்துக் கொண்டார்.