தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனது முகத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டியவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி விட்டார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இவருக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.விஜய் கூட இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்படங்களுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவர் த்ரில்லர் கதை களம் கொண்ட திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என இவரது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்புவதை நாம் பார்த்து வருகிறோம்.
மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல விதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அதைப்போல் நடிகை கீர்த்தி சுரேஷும் கேரளா பெண்கள் அணியும் புடவையை அணிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களுமா எப்பொழுதுதான் அடுத்தவங்கள பார்த்து காப்பி அடிக்கிறத நிப்பாட்ட போறீங்க என பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்