தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக உருமாறி உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். காரணம் குறைந்த திரைப்படங்களிலேயே நடித்து இருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் படங்களாக மாறியதால் முன்னணி நடிகராக வலம் வருகிறார் மேலும் தனது தனது நடிப்பு திறமையை ஏற்றார் போல அதிக சம்பளம் வாங்கி அசத்துகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார் . இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன அந்த வகையில் டான், அயாலன், சிங்க பாதை மற்றும் அனுதிப் இயக்கத்தில் ஒரு படமும் பண்ண இருக்கிறார். அப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என நடிகர் சிவகார்த்திகேயன்சொன்ன தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மாட்டேன் என்று சொல்லி உள்ளார்
காரணம் ஒரே நடிகையுடன் அடுத்தடுத்து நாம் நடித்தால் அந்த நடிகையுடன் சேர்த்து வைத்து கிசுகிசு எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்தக் காரணத்தினால் தான் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்துவிட்டேன் மீண்டும் நடித்தால் கிசு கிசு இது விடுவார்கள் என்ற காரணத்தினால் நான் வேண்டாமென ஆனால் இயக்குனரோ இந்த கதைக்கு நிச்சயமாக கீர்த்தி சுரேஷ் செம்மையாக செட் ஆவார் என கூறி வழியில்லாமல் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சேர்ந்து நடித்தார். சொன்னது போலவே இந்த படத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார்.