நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், அவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இது என்ன மாயம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் ஆனால் சினிமாவிற்கு பைலட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் விஷால் என பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், கடைசியாக தமிழில் இவர் சர்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார்,.
பின்பு பாலிவுட் பக்கம் பிரபல நடிகையாக வலம் வரலாம் என உடல் எடையை குறைத்து பாலிவுட்டில் முயற்சி செய்தார் ஆனால் அங்கு இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தெலுங்குப் பக்கம் சென்றார் தற்போது தெலுங்கில் மிஸ் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் ஒரு திரைப் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல் தமிழில் பெண்குயின், ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.