துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ் – பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

keerthy-suresh-
keerthy-suresh-

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்து அறிமுகமானவர். பின்பு இவர் சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய், ரஜினி,தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷிற்கு..

ஒரு கட்டத்தில் சோலோ திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி டாப் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திய ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வந்தவர்.  மேலும் இந்த படத்திற்காக தனது உடல் எடையையும் மிக மோசமாக குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் செல்வராகவனுடன் இணைந்து சானி ஆயிதம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் டாப் ஹீரோவான மகேஷ் பாபுவுடன் ஜோடி போட்டு “சர்க்காரு வாரி பட்டா” என்ற திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் போடாமல் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.