மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷை தமிழ் சினிமா தான் மிகப்பெரிய உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பதோடு மற்ற மொழிகளிலும் பயணிக்க தமிழ் சினிமாவிற்கு பெரிதும் உதவியது. தமிழ் சினிமாவில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்கள் வந்த வண்ணமே இருந்ததால் இந்திய அளவில் கவனிக்கபட்டார்.
அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் மேலும் பிற மொழிகளான தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களிலும் தொடர்ந்து நடித்து வருவதால் அவர் தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார். விரைவில் சம்பளத்தையும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பிற மொழிகளில் சுற்றித்திரிந்த கீர்த்திசுரேஷ் தற்போது தமிழில் அண்ணாத்த, சாணி காயிதம், பொன்னின் செல்வன் போன்ற திரைப்படங்கள் நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து உள்ளது ஏனென்றால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிக்க இவர் தற்போது வந்துள்ளது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக பார்க்கப்படுகிறது.
சினிமாவில் என்ட்ரியாகும் போது ஆள் கொழுக் மொழுக் என இருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென பிறமொழிகளில் செல்வதால் உடல் எடையை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைத்தார் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி பழைய நிலைக்கு திரும்புகிறார் அதன் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
இப்படியிருக்க கீர்த்தி சுரேஷ் அவரது அக்காவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருத்திருவென முழிகின்றனர். அதில் கீர்த்தி சுரேஷ் பாவாடை தாவணியில் மெலிந்து போய் இருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்..
இதோ நீங்களே பாருங்கள்.