த்ரில்லரில் மிரட்டும் கீர்த்தி சுரேஷின் பென்குயின் டீஸர் இதோ.!

keerthi suresh penguin teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார், இவர் நடிப்பில் தற்போது பென்குயின் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் தயாரித்துள்ளார், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார், அமேசான் ப்ரைமில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார், ஒரு குழந்தைக்கு தாய் என்றால் எப்படி இருப்பார்களோ அதேபோல் தனது உடலமைப்பை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். எனவே இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் களுடன் வெளியாக இருக்கிறது.

தற்பொழுது இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரலாகி வருகிறது, அதேபோல் திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.