தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.இவர் சோலோ ஹீரோயினாக நடித்து சினிமாவில் கலக்கி வந்தார். அதன்பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த இந்த இரண்டு திரைப்படங்களிலும் தமிழில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் இடையில் தனது உடல் எடையை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக மாறியதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை ஒல்லிக்குச்சி உட்பட பலவற்றை கூறி வந்தார்கள்.
இதன் காரணமாக இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த வகையில் கிடைத்த சில வாய்ப்புகளை தவற விடாமல் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நடிகை சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அவரின் மீது சர்ச்சைகள் எழுவது வழக்கம் அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் மீது தொடர்ந்த பல சர்ச்சைகளில் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல நடிகர் நடிகைகளின் மீது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் கீர்த்தி சுரேஷை பற்றியும் சில தகவல்களை கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் பொதுவாக தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் ஆடியோ லாஞ்ச் விழாவில் கலந்து கொண்டால் மிகவும் அழகாக சேரியில் கலந்து கொள்வாராம்.
இதுவே ஆந்திராவில் பட லஞ்சுக்கு சென்றால் அரைகுறை ஆடையில் தான் செல்வாராம் ஏனென்றால் தமிழ் சினிமாவை விட ஆந்திர சினிமாவில் சம்பளம் அதிகம் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.