தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதனால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விக்ரம், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு,சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதோடு இவர் நடிப்பில் நடிகர் திலகம் வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.
இதன் மூலம் சினிமாவில் இவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைத்தது. தற்பொழுது இவர் தமிழைத் தொடர்ந்து அக்கட தேசத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்து உள்ளார். அந்தவகையில் தெலுங்கு முன்னணி நடிகர் நிதி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழிலும் இவர் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாகவும், சாணி காகிதம் திரை படத்தில் ஹீரோயினாகவும் நடித்து முடித்துள்ளார். இவர் இவர் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முன்பு இருந்தது போல திரைப்படங்களின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட்டும் குறைந்துவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் இவரின் மீது பல சர்ச்சையான தகவல்கள் இணையதளத்தில் வெளி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது இந்த சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷின் அப்பா முற்றுப்புள்ளி வைத்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்ழுபோது தொழிலதிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் பிரபல ஹோட்டலில் மீட் பண்ணி கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த சர்ச்சைக்கு இதுவரையிலும் கீர்த்தி சுரேஷிடம் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான் கீர்த்திசரேஷ் அனைவருக்கும் மவுனமாக பதிலளிக்கும் வகையில் காலையில் எழுந்து அமைதியாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.