அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவருக்கு ஆரம்ப கால கட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவர் செய்த சில தவறுகளால் தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்து உள்ளது.
இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமடைந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நட்சத்திரமாக நடித்து வந்தார் இந்த இரண்டிலும் மாறி மாறி நடித்து வந்ததால் தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் மட்டும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு படங்களில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் இவர்கள் இருவரும் நடிக்க இருக்கும் திரைப்படத்தை காமெடி நிறைந்த திரைப்படத்தினை இயக்கும் எம்.ராஜேஷ் இயக்க உள்ளாராம்.
பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படத்தினை ஜெயம் ரவி அறிமுக இயக்குனரான ஆண்டனி இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பே பொன்னின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டு இருந்தார்கள் ஆனால் அப்பொழுது கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் படித்து வந்ததால் இந்த நடிக்க முடியவில்லை.
எனவே இத்திரைப்படத்தினை பற்றிய பேட்டி ஒன்றில் நான் ஏராளமான நடிகைகளுடன் நடித்து விட்டேன் கீர்த்தி சுரேஷுடன் முதன்முறையாக நடிக்க இருக்கிறேன் எனவே ரொமான்ஸ் இல்லை என்றால் எப்படி என்று கிண்டலாகப் பேசியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்து வந்ததால் தமிழ் திரைப்படங்கள் பலவற்றையும் இழந்துவிட்டார்.