கேரளா ஸ்டையில் பாவாடை தாவணி அணிந்து கனவை நிறைவேற்றிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்..!!

keerthi-suresh-new-photo-5

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிகை திலகம் திரைப்படத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பின் மூலம் இவருக்கு விருது கிடைத்தது. இவர் சினிமாவிற்கு அறிமுகமாகி சில வருடங்களிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் விஜய், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார்.

எனவே தற்பொழுது உள்ள இளசுகளின் மனதில் குடியேறியுள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் குருவாயூரப்பா கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று தரிசனம் செய்ததாகவும் தரிசனம் மிகவும் திருப்தி அளித்ததாககவும் ட்வீட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

keerthi suresh 02
keerthi suresh 02

அதோடு தாவணி பாவாடை அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறிவிட்டது.  இதற்கு டிசைனர் பூர்ணிமாவிற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

keerthi suresh 011

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் ஹாஃப் சாரியில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேவதைபோல் இருக்கிறீங்க என்று கமாண்ட்களையும்,லைக்குகளையும்  குவித்து வருகிறார்கள். இதோ அந்த கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம்.