தமிழ் சினிமாவில் குறைந்த கால கட்டத்திலேயே ரசிகர்கள் மனதை எளிதில் கவர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் ரசிகர்களை எவ்வாறு கவர்ந்துள்ளாரோ அதே அளவுக்கு மலையாளத்திலும் தனது ஆர்வத்தை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களை கவருகிறார்.
இளைய தளபதி விஜய், ரஜினி, விக்ரம்,விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் உட்பட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
தற்பொழுது நடிகர் ரஜினி உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் கொரோனா பிரச்சனையினால் ரிலீசாகும் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
தற்போது கீர்த்தி சுரேஷ் மலையாளத் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் சாணி காகிதம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை செல்வராகவன் நடிகராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஷூட்டிங் இன் பொழுது எடுத்த புகைப்படத்தை கீர்த்திசுரேஷ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி கொரோனா பாதுகாப்புடன் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது என்பது தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் கசங்கிய புடவையில் அப்படத்திற்கு ஏற்றவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்றும் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.