கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

keerthi-suresh
keerthi-suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தை கீர்த்தி சுரேஷ்க்கு நடிக்க தெரியாது என பலரும் கலாய்த்து வந்தார்கள், இந்தநிலையில் கீர்த்தி சுரேஷ் நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் தனது மொத்த திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

நடிக்க தெரியாது எனக்கூரிய பலருக்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் படி மகாநதி திரைப்படம் அமைந்தது, இந்த நிலையில் சமீபகாலமாக கீர்த்திசுரேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில்  ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான மிஸ் இந்தியா திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை நரேந்திரநாத் என்பவர்தான் இயக்கியுள்ளார். படத்தில் ஜெகபதி பாபு, நரேந்திர பிரசாத், நதியா நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

miss india
miss india

அதுமட்டுமில்லாமல் எஸ் தமன் தான் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். எனவே இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி அவர்களிடம் வைரலாகி வருகிறது.