புடவையை வாரி தூக்கிக்கொண்டு லபோதிபோ என கத்திக்கொண்டே ஓடி வரும் கீர்த்தி சுரேஷ்.! இணையதளத்தில் தீயாக பரவும் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் புடவையை தூக்கி வாரி கொண்டு கத்திக்கொண்டே ஓடிவரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இவர் முதன்முதலில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என  பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் அவர்களைப் பார்த்து நடிக்க தெரியாது என பலரும் கிண்டல் செய்த வகையில் 2017 ஆம் ஆண்டு அவர் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது அதனால் கிண்டல் செய்தவர்களை வாயை மூட வைத்தார்.

தற்பொழுது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மிகவும் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் புடவையை வாரித் தூக்கிக்கொண்டு லபோலிபோ என  கத்திக்கொண்டே ஓடி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

எங்கே ஓடுகிறார் என்று பார்த்தால் தூரத்தில் இருக்கும் படகு செல்லப் போகிறது என்பதை பார்த்து கத்திக்கொண்டே ஓடி வருகிறார் அதன் பிறகு படகில் ஏறுகிறார். இதோ அந்த வீடியோ.