தளபதி 66 உருவாக காரணமே கீர்த்தி சுரேஷ் தான்..! தளபதிகிட்டயே இவுங்க வேலைய போட்டு காட்டிட்டாங்களே..!

vijay-keerthi-suresh

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் தான்  இயக்குகிறார்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது தளபதி விஜய் தன்னுடைய 66வது திரைப்படத்தின் அப்டேட் வெளிவந்ததன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தின் மூலம் அதிகரித்துவிட்டது. இவ்வாறு இந்த திரைபடத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படி பல்லி இயக்குவது மட்டும் இல்லாமல்  தில் ராஜி என்பவர்தான் தயாரிக்க உள்ளார்.

மேலும் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படமானது தமிழ்மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியிட போவதாக திட்டமிட்டுள்ளார்கள் அந்தவகையில் இத்திரைப்படத்தினை தில் ராஜி தயாரிப்பதற்கான வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தான் வாங்கி  கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் அந்தவகையில் தெலுங்கு தயாரிப்பாளரான  தில் ராஜி கீர்த்தி சுரேஷிற்கு மிக நெருங்கிய  நண்பர் போல. அந்தவகையில் நான் எப்படியாவது தளபதி விஜயை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளாராம்.

keerthi suresh-1
keerthi suresh-1

அந்த வகையில் நீங்கள் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியுமா இதை பற்றி தளபதி விஜயிடம் பேச முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு உடனே நான் பேசுகிறேன் என்று கூறிய கீர்த்தி சுரேஷ் அவர்கள் விஜயை சந்தித்து கதையை கூறி சம்மதம் வாங்கி விட்டாராம்.

அந்த வகையில் இந்த படம் தயாரிக்க உதவியது கீர்த்தி சுரேஷ் என்றவகையில் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கு என சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.