தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015 ஆம் ஆண்டு என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பாம்புசட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் அதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அமைத்துக்கொண்டார் இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, இந்தி ,மலையாளம் என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நடிகையர் திலகம் இப்படத்திற்காக அவர் தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன மட்டுமல்லாமல் இதுகுறித்து சினிமா வட்டாரங்களும் பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர்.
இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ் அவர் அந்த செய்தி முற்றிலும் வதந்தி மட்டுமே யார் இப்படி ஒரு தகவலை கூறியது என்று எனக்கு தெரியவில்லை என கூறியிருந்தார். தினங்களுக்கு முன்பு நடிகரும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பேட்டி ஒன்றில் சுரேஷ் அவர்களுக்கு கல்யாணம் என்று பரபரப்பை கூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.