பள்ளி சீருடையில் மாணவியாக களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்.! ரெட்டை ஜடையில் ஆளை மயக்கும் புகைப்படம்.!

keerthi-suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்துள்ளார். மிகக் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்ற கீர்த்தி சுரேஷ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து விட்டார்.

முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க தெரியாது என பலரும் கலாய்த்து வந்தார்கள் இந்த நிலையில் மகாநதி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்க தெரியாது என கிண்டல் செய்த அனைவரின் மூஞ்சியில்  கரியைப் பூசினார்..

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தமிழில் முதன்முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

keerthi suresh
keerthi suresh

அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீமராஜா என பல திரைப்படங்களில் நடிகையாக நடித்து வந்தார் இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் எப்படியாவது பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து பாலிவுட் பக்கம் சென்றார் ஆனால் அதிரடியாக உடல் எடையைக் குறைத்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் செட்டாக மாட்டீர்கள் என கழட்டி விட்டுவிட்டார்கள்.

அதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையில் தெலுங்கில் 2 திரைப் படத்திலும் மலையாளத்தில் இரண்டு திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் அதேபோல் தமிழில் செல்வராகவன் நடித்து வரும் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

keerthi suresh

இந்த நிலையில்  கீர்த்தி சுரேஷ் அடிக்கடி சமூகவலைதளத்தில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அப்படி இருக்கும் நிலையில் பள்ளி பருவ பெண்ணாக யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு ரெட்டை ஜடையில் ரசிகர்களை மயக்கும்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

keerthi suresh