சினிமா உலகில் ஒரு நடிகையை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற பல வருடங்கள் போராடுவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகளோ வெகுவிரைவிலேயே முன்னணி நடிகரின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டு முன்னணி நடிகையாக மாறவது வழக்கம் அப்படி தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்திசுரேஷ்.
இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவையும் தாண்டி அவர் பிற மொழிகளான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி தற்போது பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இப்படி ஒரு பக்கம் சிறப்பாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
அது போல சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதுமாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்கும் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலேயே அழகாக இருக்கிறார்கள் எனக் கூறி அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.