தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தங்களது அழகினாலும், நடிப்பு திறமையினாலும் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து சினிமாவில் கிடுகிடுவென வரைந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா மற்றும் குயின் போன்ற படங்கள் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சினிமாவில் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவர் திடீரென்று தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியதால் சுத்தமாக பட வாய்ப்புகளே கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.
அவ்வப்போது கிடைத்த சில படங்களை வாய்ப்பை தவறவிடாமல் எந்த படமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கமிட்டாகி வந்தார். அந்த வகையில் தெலுங்கில் ஒரு படமும் தமிழில் அண்ணாத்த, சாணி காகிதம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் மற்ற நடிகைகளைப் போலவே கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் இன்று இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.