தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மற்ற நடிகைகளை இவர் சிறந்த நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை எளிதில் கவர்ந்தார். அந்த வகையில் விஜய்,விக்ரம், சிவகார்த்திகேயன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதோடு இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பெண்குயின் திரைப்படம் கொரோனாவின் முதல் அலையின் போது திரைப்படம் ஓடிடி வழியாக வெளிவந்து விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகர் திலகம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து விருதுகளையும் பெற்று இத்திரைப்படம் இவருக்கு சினிமாவில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.இவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில் தற்பொழுது இவர் ரஜினியுடன் இணைந்து தமிழில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டப்பிங் வேலையை மட்டும் இருப்பதாகவும் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.
அதோடு தெலுங்கிலும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிகர் நிதியுடன் இணைந்து ஒரு திரைப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நடிகைகளும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்தவகையில் முன்பைவிட தற்போது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் அதிகாரம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் துர்கிஷ் ஸ்டைலில் நடித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படியும் ஒரு திறமை உள்ளதா என கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்த்து இங்கே கிளிக் செய்யவும்.