நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தொடரி, ரெமோ பைரவா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். கீர்த்திசுரேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் பக்கம் செல்ல வேண்டும் என்பதற்காக தனது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார், ஆனால் உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் பாலிவுட்டில் கிடைக்க இருந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் மீண்டும் தமிழிலேயே நடிப்பதற்கு வந்துவிட்டார், உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் கருப்பு நிற புடவையில் கனகச்சிதமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.