மக்கள் மத்தியில் பிரபலமடைந்து நடிகர் நடிகைகள் என்ன செய்தாலும் அது ரசிகர்களுக்கு தெரிந்துவிடும் ரசிகர்களும் அதை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அதை பெரிய விஷயமாக மாற்றி விடுவார்கள் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
பற்றிய செய்திகள் உடனுக்குடன் வெளிவருகின்றன அண்மையில் அப்படி ஒரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கின்ற படங்களை எல்லாம் வெகுவிரைவிலேயே முடித்துவிட்டு ஜூன் 9ஆம் தேதி தனது ஆசைக் காதலன் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் திருப்பதியில் குடும்பத்தினர்கள் முன்னிலையில் சைலண்டாக நடைபெறும் என தகவல்கள் வெளிவந்தன. இப்படி இந்த நிலையில் சினிமா பிரபலங்களை அதை உறுதிப்படுத்த நயன்தாராவிடம் இந்த கேள்வியைக் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
அப்படி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ் நயன்தாராவை சந்தித்த போது கேட்டுள்ளார் உங்களுக்கும் எப்போது திருமணம் எங்கு என கேட்டார். அதிர்ச்சி அடைந்த நயன்தாரா சிறிது நேரம் யோசித்துவிட்டு சைலண்டாக வேலை நடந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் தேதியை குறிப்பிட்டு ஜூன் 9ஆம் தேதி திருமணமா என கேட்டது நயன்தாராவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தாக கூறப்படுகிறது எது எப்படியோ இந்த திருமணம் ஜூன் 9ஆம் தேதி முடிந்து அதன் பிறகு சினிமா பிரபலங்களை அழைத்து ரிஷப்ஷன் வைக்க உள்ளனர். அதுவும் பிரம்மாண்ட முறையில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுவதாக தகவல்கள் உலா வருகின்றன.