நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.2000 ஆம் ஆண்டில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பின் தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக உச்ச நட்சத்திர நடிகர் விஜயுடன் இணைந்து பைரவா சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இப்படியே தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த இவர் சோலோ கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டார்.
பின்பு என்ன நினைத்தாரோ என்னவோ டாப் ஹீரோக்களின் படங்களில் தங்கையாக நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து அசத்தினார்.எது எப்படியோ கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்து வருகின்றன.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாணி காகிதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து தற்போது முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ரசிகர்களும் தனக்கு தேவை என்பதை புரிந்து கொண்டு அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார்.
இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இப்பொழுது அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் எண்ணிக்கை மட்டுமே சுமார் 13மில்லியன் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.