தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் இவர் சினிமாவில் முதன்முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் சிறுசிறு பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு ஏழு வருடங்களில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக உருமாறினார்.
இவர் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். என்னதான் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இவர் நடித்த பாதி திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. இனி இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என கிளாமர் ரூட்டை பிடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
சமீப காலமாக சமூக வலைதளத்தில் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அதில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பல கிளாமர் புகைப்படங்களாக இருக்கிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் இந்த நிலையில் அவருடைய பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாழ்த்து கூறிய மெசேஜ் செய்து வருகிறார்கள்.
ஒரு சில பிரபலங்கள் கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் கீர்த்தியுடன் ஒரே அறையில் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் குமரன் இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருவது தற்பொழுது தெரிய வந்துள்ளது மேலும் கதிர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து என்ன கதிர் இதெல்லாம் என கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்த புகைப்படம் ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் பல ரசிகர்கள் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.