தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இதில் நடிகர் அஜித் அவர்கள் தற்போது எச் வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் துணிவு திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகளான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் சிபி, அமீர், பாவணி, ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனை தெரிந்து துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா என தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி பல மில்லியன்கள் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு பட இயக்குனரான வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபு, சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம், உள்ளிட்ட பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர். ஒரு குடும்ப செண்டிமெண்டாக உருவாகும் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி அந்த இரண்டு பாடல்களுக்கும் சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை வைத்தும் வாரிசு திரைப்படத்தை வைத்தும் ஒரு அரசியல் நடப்பதாக பிரபலம் ஒருவர் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது அஜித் அவர்கள் விஜயின் வளர்ச்சியை குறைக்க தான் இப்படி செய்கிறார் என்று கூறியுள்ளார் அதாவது அவர் கூறியதாவது விஜய் படம் மட்டும் தனியாக வந்தால் அவருடைய படத்திற்கான வசூல் புதிய புதிய சாதனையை படைக்கிறது. இதனால் அஜித் அவர்கள் தன்னுடைய படத்தையும் அவருடன் சேர்த்து ஒரு தினத்தில் வெளியிட்டால் அவருடைய சாதனையை பாதியாக குறைக்கலாம் என்று எண்ணுகிறாரோ என்னமோ என்று கூறியுள்ளார் அந்த பிரபலம்.
இது ஒரு பக்கம் இருக்க துணிவு திரைப்படத்தை வாங்கி வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செய்யும் பொலிட்டிக்கல் பற்றி அவர் கூறியுள்ளார் அதாவது முதலில் வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்க இருந்தது ஆனால் அந்த வெளியீட்டு உரிமையை படகுழு லலித் அவர்களிடம் வித்துவிட்டது.
இதனால் வாரிசு திரைப்படம் என்று ரிலீஸ் ஆகிறதோ அதே தினத்தில் துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நினைக்கிறார் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களை வைத்து சினிமா வியாபாரிகள் போடும் கணக்கு மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார்.