கையும் களவுமாக போலீசிடம் சிக்கப்போகும் கயல்.. தீவிர விசாரணையில் போலீஸ் அதிகாரிகள்

kayal
kayal

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. எழிலின் திருமணத்தை வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது எழிலின் தம்பி பிரபுவை ஆனந்தி கொலை செய்துள்ளார்.

எனவே தனது தங்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கயல் போராடி வருகிறார். பிரபுவை தனது தங்கை ஆனந்தி தான் கொலை செய்திருக்கிறார் என்ற உண்மை கயலுக்கு தெரிய வருகிறது. எனவே தங்கையை காப்பாற்றும் முயற்சியில் கயல் ஈடுபட்டு வரும் நிலையில் இருவரும் சேர்ந்து பிரபு சடலத்தை முட்டையில் கட்டி புதைத்து விடுகிறார்கள். பிரபுவை குடும்பத்தினர்கள் தேடி வர ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

போலீசார்களும் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் கயலின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்றைய எபிசோடில் பிரபு-ஆனந்தியின் முன் விரோதம் போலீசுக்கு தெரிய வருகிறது. எனவே இந்த விஷயம் பிரபுவின் அம்மாவிடம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட அந்த கயல் தான் பிரபுவை என்னமோ பண்ணி இருக்கா என்கின்றார் கயலின் பெரியப்பா தர்மலிங்கம்.

இதனை அடுத்து கயல் பணிபுரிய மருத்துவமனைக்கு வந்து போலீஸார்கள் விசாரணையை ஆரம்பிக்கின்றனர். மண்டபத்தில் நீ கை நீட்டி அடிச்சதுக்கு அப்புறம் தான் பிரபுவை காணோம் என தொடங்குகின்றனர். இதற்கு கயல் முழித்துக் கொண்டிருக்க இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

இவ்வாறு போலீசார் கயல் எப்படி  சமாளிக்க போகிறார், இதிலிருந்து எப்படி வெளிவர போகிறார் என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் கயல் தான் என்னவோ பிரபுவை என்ற சந்தேகம் இருந்து வருகிறது.