Kayal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக கயல் சீரியல் இருந்து வருகிறது. மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த எழில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
எழில் அம்மாவின் சூழ்ச்சியினால் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வந்த நிலையில் தற்போது கயலை ஆட்கள் வைத்து கடத்த அவர்கள் இவரை கொல்லப்போகும் நேரத்தில் எழில் வந்து கயலை காப்பாற்றி விடுகிறார். மண்டபத்திற்கு சென்றவுடன் இந்த திருமணம் நடக்காது என எழில் கூற இதனால் அதிர்ச்சி அடைந்த இவருடைய அம்மா எப்படி இவ இங்கு வந்தா எனக்கூறி போன் செய்து கேட்க பிறகு எழில் தான் கயலை காப்பாற்றியது என இவருக்கு தெரிய வருகிறது.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தவறாக பேசியதற்கு வில்லி மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும் இல்லை என்றால் கன்னத்தில் அறை வாங்கி கொள்ளும்படி கூறுகிறார். இவ்வாறு நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக திருமணத்தை நிறுத்தி விடுவேன் என எழில் கூற பிறகு மன்னிப்பு கேட்கின்றனர்.
அதன் பிறகு திருமணத்திற்கான வேலைகளை தொடங்க தாலியை எல்லோருக்கும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். பிறகு மாப்பிள்ளையான எழில் கையில் தாலியை ஐயர் கொடுக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இதனை அடுத்து தற்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, எழில் மணப்பெண்ணின் பக்கத்திலிருந்த கயல் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார். இவ்வாறு அனைவரும் எதிர்பார்த்தது போலவே எழில், கயல் திருமணம் நடைபெற்ற முடிகிறது. இதற்கு மேல் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் தெரிந்துக் கொள்ளலாம்.