சன் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது கயல் தொடர். இது டிஆர்பி யிலும் நல்ல ரேட்டிங்கை பெற்று வரும் சீரியலாகும்.. இதில் ஹீரோயின்னாக கயல் கதாபாத்திரத்தில் ஒரு தைரியமான பெண்ணாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் என்ற பிரபல சீரியல் நடிகர் நடித்து வருகிறார் இதில் தற்பொழுது கயலின் அண்ணன் மூர்த்தி ஒரு இடத்தில் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார்.. அந்த பணம் கள்ள நோட்டு என்பதால் போலீஸ் மூர்த்தியை அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனில் வைத்திருக்கின்றனர்.
கயல் மூர்த்தியை ஸ்டேஷனில் வந்து பார்க்கிறார் அவரை போலிஸ் செம்ம அடி அடித்திருக்கின்றனர்.. அதை பார்த்து கோபப்பட்ட கயல் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் எப்படி என் அண்ணன் மேல கை வைக்கலாம் என போலீஸ் இடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் பிறகு அந்த கள்ள நோட்டை கொடுத்த பைனான்சியரோடு வரேன் என்று கயல் கிளம்பி விட்டார்.
ஏற்கனவே பைனான்சியர் வீட்டிற்கு நியாயம் கேட்க போன மூர்த்தியின் மனைவியை பிடித்து வைத்துக்கொண்டு டார்ச்சர் பண்ணுகின்றனர் இந்நிலையில் கயலும் அங்கு போகிறார் இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
அதில் வருண் உதய் ரூ 5000, எழில் அம்மா ரூ 5500, சஞ்சீவ் ரூ 13,000, பாலத்யா ரூ 7,000, முத்துராமன் ரூ 10,000, ஜானகி தேவி ரூ 10,000, அபிநவ்யா ரூ 4500, ஐஸ்வர்யா ரூ 4500, மீனா குமாரி ரூ 5000, கோபி ரூ 5000, ஐயப்பன் ரூ 7000, சுமங்கலி ரூ 5500, முரளி ரூ 4500, சைத்ரா ரெட்டி ரூ15,000 ஆகும்..