கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த சம்பளப் பட்டியல்.

kayal-serial
kayal-serial

பல்லாண்டு காலங்களாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள்தான் டாப் 5 இல் இருந்து வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் உள்ளிட்ட சீரியல் கூட டாப் 5 இடம் பிடிப்பது இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஒளிபரப்பான சில வாரங்களிலேயே டிஆர்பி-யில் முதல் இடத்தைப் பிடித்த சீரியல்தான் கயல்.  இந்த சீரியல் அறிமுகமான முதல் வாரத்திலேயே அனைத்து செயல்களையும் ஓவர்டேக் செய்து தேர்வில் முதலிடத்தை பிடித்தது.

இவ்வாறு முதல் வாரத்திலேயே கயல் சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகிப்பதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதை மற்றும் இந்த சீரியலின் கதாபாத்திரங்கள் தான்.  இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் ஹீரோவாக எழிலரசன் கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் நடிகரும்,  ஆலியா மானசாவின் கணவருமான சஞ்சீவ் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து மீனா குமாரி, சஞ்சீவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். தற்போது இவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. சைத்ரா ரெட்டி அதிகபட்சமாக ஒரு நாளுக்கு ரூபாய் 25 ஆயிரமும்,  வில்லனாக நடித்து வரும் முத்துராமன் 15 ஆயிரமும்,  எழில் ரோலில் நடிக்கும் சஞ்சீவ் ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரமும்,  காமாட்சி ரோலில் நடித்தவர் மீனா குமாரி அவர்கள் ரூபாய் 12 ஆயிரம், மற்ற துணை நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு நாளைக்கு 10 ஆயிரமும் சம்பளம் பெற்று வருகிறார்கள்.