அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்ளப்போகும் கயல் ஆனந்தி.! அட அதுக்குள்ளேயேவா ரசிகர்கள் ஷாக்

kayal-ananthi

நடிகை கயல் ஆனந்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், இவர் பெரிதாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார்.

முனன்னணி நடிகர்களான நயன்தாரா, சமந்தா ஆகியோர்களை ரசிகர்கள் கொண்டாடினாலும் சின்னஞ்சிறு நடிகைகளான கயல் ஆனந்தி போன்ற நடிகைகளையும் ரசிகர்கள் ஓரளவு கொண்டாடுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கயல் ஆனந்திக்கு தமிழ் ரசிகர்களிடையே தனியிடம் உண்டு.  பொதுவாக கயல் ஆனந்தி தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு கயல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், கடவுள் இருக்கான் குமாரு எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, திரிஷா இல்லனா நயன்தாரா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

kayal anandhi
kayal anandhi

கயல் ஆனந்தி என் ஆளோட செருப்ப காணோம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது, பின்பு அதிலிருந்து மீண்டுவர பரியேறும் பெருமாள் திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் கயல் ஆனந்தி அவர்களுக்கு திடீரென திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது, இன்று இரவு பிரபல நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது திருமணத்திற்குப் பிறகு பல நடிகைகளுக்கு மார்க்கெட் கேள்விக்குறியாய் மாறியது அந்த வகையில் கயல் ஆனந்தியின் நிலைமை கேள்விக்குறியாக மாறிடுமோ என அச்சத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.