பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிய காவியா.! அவருக்கு பதில் இனிமேல் இந்த நடிகை தான்..

arivu-mani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இவர் தற்பொழுது விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் முல்லை கதாபாத்திரத்தில் இந்த நடிகையை நடிக்க வைக்க சீரியல் குழுவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா அறிவுமணி இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வந்த சித்ரா இறந்த நிலையில் இவருக்கு முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து நேற்றைய தினம் இவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பே காவியாவிற்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக வதந்திகள் வெளிவந்த நிலையில் அந்த வதந்திகள் நேற்று உண்மையாகியுள்ளது.

saranya
saranya

ஆனால் காரணம் தெரியவில்லை இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சின்னத்திரை நடிகை சரண்யா துராடியிடம் சீரியல் குழுவினர்கள் பேச்சு வர்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.சித்ரா இறந்த காலகட்டத்தில் அனைவரும் அவருடைய தோழி சரண்யாவை நடிக்க வையுங்கள் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அது தற்பொழுது நடப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து காவியா விளக்கியதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.இவ்வாறு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதற்கான முக்கிய காரணம் முல்லை கதாபாத்திரம் தான். எனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.