பிரபல விஜய் டிவியின் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என்று பலவற்றை ஒளிபரப்பி தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் டப் கொடுத்து வருகிறது விஜய் டிவி.
அந்த வகையில் TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இந்த சீரியலில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. எனவே கதிர், மூர்த்தி, ஜீவா, கண்ணன் மற்றும் முல்லை போன்றவர்கள் கேரக்டரில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரங்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள்.
அதோடு இந்த சீரியலில் தற்பொழுது தனம் மற்றும் மூர்த்தியின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த சீரியலில் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்து உள்ள கேரக்டர்கள் முல்லை மற்றும் கதிர்.
இவர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவிற்குப் பிறகு தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவிய முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சீரியல் அறிமுகமாகும் போது ரசிகர்கள் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது காவியாவின் சிறந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சித்திரா எந்த அளவிற்கு பிரபலமனாரோ அளவிற்கு காவியாவும் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் காவியா தற்பொழுது வெள்ளித்திரையில் வாணிபோஜன் நடிக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது மணப்பெண் கோலத்தில் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.