Kavin : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ கவின். முதலில் சின்னத்திரையில் கனா காணும் சீரியலில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு சரவணன் மீனாட்சி என பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமடைந்து வந்த கவின் திடீரென வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த இவருக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் அதன் பிறகு பிக்பாஸில் பிரபலமடைந்த கவினுக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்த வகையில் லிப்ட், டாடா படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஊர் குருவி மற்றும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார் அதன்படி ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் உள்ள பார்க் ஹோட்டலில் இவருடைய திருமணம் நடந்தது.
அந்த திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். புகைப்படங்கள் கூட வெளியே வந்து வைரலாகின அந்த நேரத்தில் லாஸ்லியா ஒரு சோகமான புகைப்படத்தை பதிவிட்டு என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என கேப்ஷன் போட்டிருந்தார்.
பிறகு கல்யாண நேரத்தில் யாராலும் காப்பாற்ற முடியாது என டேக் வைத்திருந்தார் லாஸ்லியா. திருமணத்திற்கு பிறகு கவின் மனைவி மோனிகா நான் கவினின் அதிகாரப்பூர்வ மனைவியாகிவிட்டேன் என டாக் வைக்க.. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கிறீர்களா என கூறி கமெண்ட் அடித்து செய்தியை பரப்பி வருகின்றனர்.