நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த கதையில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தொடர்ந்து அஜித் நடித்த துணிவு திரைப்படமும்..
பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியானது. படத்தில் ஆக்சன், மாஸ், காமெடியையும் தாண்டி சமூக கருத்துக்கள் இடம் பெற்றதால் ரசிகர்ககள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது தொடர்ந்து சிறப்பாக ஓடியதால்..
ஒட்டுமொத்தமாக இதுவரை 260 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. தற்பொழுது OTT தளத்திலும் வெளியாகி அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறதாம் இதனால் நடிகர் அஜித்தும் சரி, துணிவு படக்குழுவும் சரி செம்ம மகிழ்ச்சியில் இருக்கின்றது.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க வேண்டும்.. அதை மிஸ் செய்து விட்டார் என கூறி சமூக வலைதள பக்கத்தில் ஒரு பெரிய செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் தர்ஷன் துணிவு திரைப்படத்தில் ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கினார் ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது கவின் தான் என சிலர் சமூக வலைதள பக்கத்தில் சொல்லி வைரலாக்கி வருகின்றனர் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.