தனுஷ் பட வாய்ப்பை தட்டி பறித்த கவின்.? இயக்குனர் யார் தெரியுமா..

dhanush
dhanush

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது.

அதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மீதி கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் மற்றும் தமிழ் இயக்குனர்களுடன் கதை கேட்டுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான பியார் பிரேமோ காதல் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் இளன். இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் வைத்து ஸ்டார் என்னும் படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் ஆனால் அந்த படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்ததால் பாதியில் போடப்பட்டது இதனை எடுத்து அந்த படத்தை எடுக்க பல தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி பார்த்தார்.

ஆனால் அந்த படத்தில் தனுஷ் நடித்தால் ஓகே என பலரும் சொல்ல.. தனுஷை வைத்து ஸ்டார் என்னும் படத்தை உருவாக்க இருப்பதாக பெரிய அளவில் பேசப்பட்டது அதோட மட்டுமல்லாமல் தனுஷுக்கு தனியாக ஒரு கதையையும் சொன்னார்.. ஆனால் தனுஷ், இளன் இணையும் எந்த ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளி வராததால்.. தனுஷுக்கு சொன்ன கதையை தற்பொழுது கவினுக்கு சொல்லி உள்ளாராம் இளன்.

நடிகர் கவின் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த லிப்ட், டாடா திரைப்படம் போன்றவை வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஊர் குருவி போன்ற திரைப்படங்களில் நடித்த வருகிறார் இதனை தொடர்ந்து இளன் இயக்கும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கான அதிகாரப்பூர் தகவல்கள் வெகு  விரைவிலேயே வரும் எனவும் கூறப்படுகிறது.