விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3, இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, சொல்லப்போனால் இதற்குமுன் ஒளிபரப்பப்பட்ட இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தான் மக்களிடம் செம ஹிட்டடித்தது, இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அதில் ஒருவர் கவின்.
இவர் படிக்கும்போது ஆர்ஜே மற்றும் எஃப் எம் சேனல்களில் பணியாற்றினார், சினிமா துறையில் இருந்த மோகத்தால் நண்பர்களின் உதவியால் குறும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார், பின்பு நடிப்பைக் கற்றுக் கொள்வதற்காக கூத்துப்பட்டறையில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சி எடுத்தார்.
அதன்பின்பு சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார், பின்பு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது, பிக்பாஸ்க்கு பிற்கு கவின் வாழ்க்கையே மாறிவிட்டது. இவருக்கு பல ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆர்மி தொடங்கிவிட்டார்கள்.
அதேபோல் கவினுக்கு இதன் முலம் பல பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த ஒரு படத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கவின் நடிக்கும் இரண்டாவது திரைப்படத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.Ekaa நிறுவனம் தயாரிக்கும் lift திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடிக்க இருக்கிறார்.
அமிர்தா ஐயர் இதற்குமுன் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்தவர், படத்தை புதுமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.