Kavin : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் கவின் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன திரையில் ரியாலிட்டி ஷோக்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லாஸ்லியாவின் காதல் வலையில் சிக்கினார்.
ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை என்பது போல் ஆகிவிட்டது. என்னடா இப்படி விழுந்து விழுந்து காதலிச்சீங்க வெளிய வந்து இப்படி சொல்லிட்டீங்களே என மக்கள் தான் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் வீட்லதான் காதல் வெளியில் வந்தா நீ யாரோ நான் யாரோ வா அப்போ அதெல்லாம் கண்டென்டா என பல விமர்சனங்கள் எழுந்தது. கவின் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையின் கதாபாத்திரத்தில் நடித்து தான் பல இளம் பெண்களின் மனதில் கொள்ளை கொண்டார் .
நடிகர் கவின் சின்னத்தில் இருக்கும் பொழுது மக்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார் இந்த நிலையில் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் நேற்று இன்று நாளை, பீட்சா போன்ற திரைப்படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகனாக அந்தஸ்து கிடைத்தது முதன்முதலாக லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து மிரட்டினார் அதனைத் தொடர்ந்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதிலும் இடம் பிடித்தார் இந்த திரைப்படத்தின் வெற்றி கவினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
மேலும் கவின் சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார் நீண்ட காலமாக தான் காதலித்து வந்த தோழியை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு கதாநாயகனாக நடிக்க வைக்க கவின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் துருவ விக்ரம் திரைப்படத்தை முடித்துவிட்டு தனுஷ் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு கவின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது பொண்டாட்டி வந்த நேரம் கவின் கை வசம் ஐந்து திரைப்படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தையும் தற்போது முடித்துள்ளார் அதன்பிறகு நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனம் தயக்கம் திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் சிவபாலன் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் கவின் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.