பிக்பாஸ் கவினுக்கு ஜோடி போட உள்ள விஜய் பட நடிகை.! எந்த நடிகை தெரியுமா.?

vijay-and-kavin
vijay-and-kavin

சின்னத்திரையின் மூலம் அறிமுகமான ஏராளமான நடிகர், நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.அதுவும் ஒரு சில நடிகர் நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வருவதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு பெருத்த ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்கள்.

அந்த வகையில் பொதுவாக எளிதில் பிரபலமடைந்து சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற வேண்டுமென்றால் அதற்கு தற்போது உள்ள அனைத்து போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கும் ஒரே ஒரு தொலைக்காட்சி விஜய் டிவி என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் மற்ற தொலைக்காட்சிகளை விடவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றின் பிரபலமடைந்து தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கவின் இந்த சீரியலுக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். ஏனென்றால் இந்நிகழ்ச்சிற்க்கு முன் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதன் மூலம் ஒட்டுமொத்த ராசிக்காரர்கள் கவனத்தையும் ஈர்த்த இவருக்கு தற்போது இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் லிப்ட் என்ற திரைப்படம் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இத்திரைப்படம் திரையரங்குகள் திறந்ததும் வெளியாகும் என்ற படக்குழுவினர்கள் கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கவின் வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த வெப் சீரியலை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் என்பவர் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தொடருக்கு ஆகாஷ் வாணி என பெயர் வைத்துள்ளனர்.

vijay bikil
vijay bikil

இந்த வெப் தொடரில் கவினுக்கு ஜோடியாக விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த ரெபா மோனிகா ஜான் நடிக்கவிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட், மேகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

தற்பொழுது எல்லாம் திரைப்படங்களை விடவும் வெப் தொடருக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. எனவே விஜய் சேதுபதி, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களும் புதிய வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.